நவரத்தினங்களால் ஆன சிம்மாசனம் வருகிற 9-ந்தேதி ஜோடிப்பு
|மைசூரு தசரா விழாவைெயாட்டி நவரத்தினங்களால் ஆன சிம்மாசனம் வருகிற 9-ந்தேதி மைசூரு அரண்மனையில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஜோடிக்கப்பட உள்ளது.
மைசூரு:
மைசூரு தசரா விழாவைெயாட்டி நவரத்தினங்களால் ஆன சிம்மாசனம் வருகிற 9-ந்தேதி மைசூரு அரண்மனையில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஜோடிக்கப்பட உள்ளது.
மைசூரு தசரா விழா
உலக புகழ்ெபற்ற மைசூரு தசரா விழா ஆண்டுதோறும் நவராத்திரியையொட்டி 10 நாட்கள் கோலாகலமாக ெகாண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டும் மைசூரு தசரா விழா வருகிற 15-ந்தேதி தொடங்கி 24-ந்தேதி வரை 10 நாட்கள் நடைபெற உள்ளது. தசரா விழாவையொட்டி மன்னர் குடும்பத்தினர் சார்பில் அரண்மனையில் தனியார் தர்பார் நடத்தப்படுவது வழக்கம்.
இதில், தங்கம், வைரம், வைடூரியம், வெள்ளி உள்ளிட்ட நவரத்தினங்களால் ஆன சிம்மாசனத்தில் அமர்ந்து மன்னர் யதுவீர் தனியார் தர்பார் நடத்துவார். இதற்காக 9 பாகங்களாக இருக்கும் சிம்மாசனம் தசரா விழாவைெயாட்டி ஜோடிக்கப்படும். தசரா விழா முடிந்ததும் சிம்மாசனம் தனித்தனி பாகங்களாக பிரிக்கப்பட்டு அரசு கருவூலத்தில் பாதுகாப்பாக வைக்கப்படும்.
நவரத்தினங்களால் ஆன சிம்மாசனம்
அதேபோல், இந்த ஆண்டும் தசரா விழாவையொட்டி அரண்மனையில் தனியார் தர்பார் நடக்க உள்ளது. இதற்காக நவரத்தினங்களால் ஆன சிம்மாசனம் வருகிற 9-ந்தேதி ஜோடிக்கப்பட உள்ளது. அன்றைய தினம் காைல அரசு கருவூலத்தில் இருந்து நவரத்தினங்களால் ஆன சிம்மாசன பாகங்கள் கலெக்டர் ராஜேந்திரா, போலீஸ் கமிஷனர் ரமேஷ் முன்னிலையில் இருந்து எடுக்கப்பட்டு அரண்மனை நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட உள்ளது.
பின்னா் காலை அரண்மனை வளாகத்தில் மன்னர் யதுவீர் தலைமையில் நவக்கிரக ஹோமம், சாந்தி பூஜை, சாமுண்டீஸ்வரி பூஜை, சண்டி ஹோமம் நடைபெற உள்ளது. இதையடுத்து காலை 10.05 முதல் மதியம் 1 மணி வரை அரண்மனை அம்பாவிலாஸ் தர்பார் ஹாலில் வைத்து மன்னர் யதுவீர், மகாராணி பிரமோதா தேவி, கலெக்டர் ராஜேந்திரா, போலீஸ் கமிஷனர் ரமேஷ் முன்னிலையில் ஜோடிக்கப்பட உள்ளது.
சுற்றுலா பயணிகளுக்கு தடை
இந்த சிம்மாசன ஜோடிப்பு பணியில் மண்டியா மாவட்டம் ஸ்ரீரங்கப்பட்டணா தாலுகா ெகஜ்ஜகெரே கிராமத்தை சேர்ந்த ஒரே குடும்பத்தினர் 6 பேர் ஜோடிக்க உள்ளனர். சிம்மாசனம் ஜோடிக்கப்பட்ட பிறகு அது ெவள்ளை துணியால் மூடி வைக்கப்பட உள்ளது. தசரா விழா தொடங்கும் 15-ந்தேதி முதல் மன்னர் யதுவீர் அதில் அமர்ந்து தனியார் தர்பார் நடத்த உள்ளார்.
சிம்மாசன ஜோடிப்பையொட்டி அரண்மனையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட உள்ளது. மேலும் அன்றைய தினம் காலை முதல் மதியம் 1 மணி வரை அரண்மனைக்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
பல கோடி ரூபாய் மதிப்பு
சுமார் 600 ஆண்டுகளுக்கு முன்பு மன்னர் காலத்தில் நவரத்தினங்களால் ஆன சிம்மாசனம் ஜோடிக்கப்பட்டே இருந்தது. ஆனால் அதன்பிறகு மன்னர் ஆட்சி முடிந்து மக்களாட்சி தொடங்கிய பிறகு அரண்மனையில் இருந்த நவரத்தின சிம்மாசனத்தை அரசு தன்வசம் எடுத்து கொண்டது. அதனை 9 பாகங்களாக பிரித்து அரசு கருவூலத்தில் வைக்கப்பட்டது.
மைசூரு தசரா சமயத்தில் மட்டும் தனியார் தர்பார் நடத்துவதற்காக அரசு கருவூலத்தில் இருந்து அந்த சிம்மாசன பாகங்கள் எடுக்கப்பட்டு ஜோடிக்கப்பட்டு வருகிறது. தசரா விழா முடிந்ததும் சிம்மாசன பாகங்கள் பிரிக்கப்பட்டு கருவூலத்தில் பாதுகாப்பாக வைக்கப்படும். அந்த சிம்மாசனத்தின் மதிப்பு பல கோடி ரூபாய் இருக்கும் என கூறப்படுகிறது.