< Back
தேசிய செய்திகள்
கொச்சி விமான நிலையத்தில் ரூ.85 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்
தேசிய செய்திகள்

கொச்சி விமான நிலையத்தில் ரூ.85 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்

தினத்தந்தி
|
22 Jan 2023 9:25 PM IST

கொச்சி விமான நிலையத்தில் பயணி ஒருவரிடமிருந்து ரூ.85 லட்சம் மதிப்புள்ள தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

கொச்சி,

கொச்சி விமான நிலையத்தில் பயணி ஒருவரிடமிருந்து ரூ.85 லட்சம் மதிப்புள்ள சுமார் 1.978 கிலோ எடையுள்ள தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

குவைத்தில் இருந்து இண்டிகோ விமானத்தில் கொச்சி வந்த பயணி ஒருவரிடம் சோதனை செய்ததில்

ஒட்டும் டேப்பைப் பயன்படுத்தி காலில் சுற்றியிருந்த1.978 கிலோ எடையுள்ள தங்கம் அடங்கிய 2 செவ்வக வடிவிலான பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது. அந்த நபர் மலப்புரத்தைச் சேர்ந்த அப்துல் என்பது கண்டறியப்பட்டுள்ளது.

இது தொடர்பாக மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது.

மேலும் செய்திகள்