< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
கொச்சி விமான நிலையத்தில் ரூ.38 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்..!
|18 Nov 2022 10:06 PM IST
கொச்சி விமான நிலையத்தில் ரூ.38 லட்சம் மதிப்புள்ள சுமார் 422 கிராம் தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
கொச்சி,
கொச்சி விமான நிலையத்தில் ரூ.38 லட்சம் மதிப்புள்ள சுமார் 422 கிராம் தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். துபாயில் இருந்து வந்த பயணியிடம் இருந்து இந்த தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
தங்கம், மோதிரங்களிலும் பேஸ்ட் வடிவில் உள்ளாடைக்குள்ளும் மறைத்து வைத்து கொண்டு வரப்பட்டது. மாட்டிக் கொள்ளக்கூடாது என்பதற்காக உள்ளாடைக்குள் பை போன்று உருவாக்கி அதற்குள் தங்கத்தை வைத்து தைத்திருந்ததாக சுங்கத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.