< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
மங்களூரு விமான நிலையத்தில் ரூ.17 லட்சம் தங்கம் சிக்கியது
|11 Aug 2022 3:14 AM IST
மங்களூரு விமான நிலையத்தில் ரூ.17 லட்சம் தங்கம் சிக்கியது
மங்களூரு:
தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூருவில் உள்ள விமான நிலையத்துக்கு நேற்று துபாயில் இருந்து தனியார் விமானம் ஒன்று வந்தது. அந்த விமானத்தில் வந்த பயணிகளையும், அவர்களது உடைமைகளையும் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது ஒரு பயணி தனது செருப்புக்கு நடுவே தங்கத்தை பேஸ்ட் வடிவில் மறைத்து கடத்தி வந்தது ெதரியவந்தது. இதையடுத்து அவரிடம் இருந்து ரூ.17.43 லட்சம் மதிப்பிலான 332 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர் அந்த நபரை போலீசார் பஜ்பே போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் அவரை கைது செய்தனர். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.