< Back
மாநில செய்திகள்
துபாயில் இருந்து ரூ.3.5 கோடி தங்கம் கடத்தல்.. சென்னை விமான நிலையத்தில் 3 பேர் கைது
மாநில செய்திகள்

துபாயில் இருந்து ரூ.3.5 கோடி தங்கம் கடத்தல்.. சென்னை விமான நிலையத்தில் 3 பேர் கைது

தினத்தந்தி
|
9 Dec 2023 6:14 PM IST

தங்கம் கடத்தி வந்த பெண்ணை கைது செய்து விசாரித்ததில், வேறு இரண்டு நபர்கள் தன்னிடம் கொடுத்ததாக கூறினார்.

சென்னை,

சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு, துபாயில் இருந்து பெரும் அளவில் தங்கம் கடத்தி வரப்படுவதாக சென்னை மண்டல மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள், விமான நிலையத்திற்கு வந்து, துபாயில் இருந்து விமானத்தில் வந்த பயணிகளிடம் தீவிர சோதனை மேற்கொண்டனர். அப்போது பெண் பயணி ஒருவரின் பெட்டியில் தங்கக் கட்டிகள் மறைத்து வைத்து இருந்தது தெரியவந்தது. பெட்டியில் சுமார் 7 கிலோ எடையுள்ள ரூ.3.5 கோடி மதிப்பிலான தங்க கட்டிகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

மேலும் அப்பெண்ணை கைது செய்து விசாரித்ததில் அந்த பெட்டியை வேறு இரண்டு நபர்கள் தன்னிடம் கொடுத்ததாக கூறினார். இதை தொடர்ந்து அந்த 2 பேரையும் வருவாய் புலனாய்வு அதிகாரிகள் கைது செய்தனர். கைது செய்த மூவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்படுகிறது.

மேலும் செய்திகள்