< Back
தேசிய செய்திகள்
முதல்-மந்திரி பினராயி விஜயனிடம் விசாரணை நடத்தக்கோரிய வழக்கு தள்ளுபடி - கேரள ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு

கோப்புப்படம்

தேசிய செய்திகள்

முதல்-மந்திரி பினராயி விஜயனிடம் விசாரணை நடத்தக்கோரிய வழக்கு தள்ளுபடி - கேரள ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு

தினத்தந்தி
|
13 April 2023 1:16 AM IST

தங்க கடத்தல் சம்பவம் தொடர்பாக முதல்-மந்திரி பினராயி விஜயனிடம் விசாரணை நடத்தக்கோரிய வழக்கினை தள்ளுபடி செய்து கேரள ஐகோர்ட்டு உத்தரவு பிறப்பித்தது.

திருவனந்தபுரம்,

கேரளாவில் 2017-ம் ஆண்டு நடந்த தங்கம் கடத்தல் விவகாரத்தில் முக்கிய நபராக கருதப்பட்டவர் சுவப்னா சுரேஷ். இவருடன் நெருங்கிய தொடர்பில் இருந்த முதல்-மந்திரியின் முன்னாள் முதன்மை செயலாளர் உள்பட பலர் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர்.

இதைத்தொடர்ந்து முதல்-மந்திரியின் அலுவலகத்திற்கும், முதல்-மந்திரிக்கும் இந்த தங்கம் கடத்தலில் தொடர்பு இருந்ததாக சுவப்னா சுரேஷ் அடிக்கடி கூறிவந்தார். இதையடுத்து சுவப்னா சுரேஷ் பணி செய்த தனியார் நிறுவனம் சார்பில் தங்கம் கடத்தல் விவகாரம் தொடர்பாக முதல்-மந்திரி பினராயி விஜயனிடமும் விசாரணை நடத்தக்கோரி கேரள ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு மீதான விசாரணை நேற்று நடைபெற்றது. அப்போது, மனு தாக்கல் செய்த நிறுவனத்திற்கும், தங்கம் கடத்தல் விவகாரத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை என்று கூறி அந்த மனுவை கேரள ஐகோர்ட்டு தள்ளுபடி செய்தது.

மேலும் செய்திகள்