< Back
தேசிய செய்திகள்
டெல்லி விமான நிலையத்தில் தங்கம் கடத்தல்; 2 சீனர்கள் உள்பட 4 பேர் கைது
தேசிய செய்திகள்

டெல்லி விமான நிலையத்தில் தங்கம் கடத்தல்; 2 சீனர்கள் உள்பட 4 பேர் கைது

தினத்தந்தி
|
6 Jun 2024 5:57 PM IST

டெல்லி விமான நிலையத்தில் தங்கத்தை கடத்தி வந்த 2 சீனர்கள் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

புதுடெல்லி,

டெல்லியில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை ஹாங்காங்கில் இருந்து வந்திறங்கிய பயணிகளிடம் விமான நிலைய அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையின்போது 4 பயணிகள் தங்களது உடைமைகளில் தங்கத்தை மறைத்து வைத்து கடத்தி வந்திருப்பதை அதிகாரிகள் கண்டறிந்தனர்.

அவர்களிடம் இருந்து ரூ.5.45 கோடி மதிப்புள்ள 8.2 கிலோ தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். கடத்தலில் ஈடுபட்ட 3 பெண்கள் மற்றும் ஒரு ஆண் என மொத்தம் 4 பேரை அதிகாரிகள் கைது செய்தனர். இதில் 2 பேர் சீனாவைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கடத்தல் சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

மேலும் செய்திகள்