< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
மத்திய அரசின் நடவடிக்கையால் தங்கம், சமையல் எண்ணெய் விலை குறைய வாய்ப்பு
|3 Oct 2022 6:59 PM IST
மத்திய அரசின் நடவடிக்கையால் தங்கம், சமையல் எண்ணெய் விலை குறைய வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
புதுடெல்லி,
கச்சா எண்ணெய் இறக்குமதி நாடான இந்தியா, உலகில் அதிகமாக தங்கம் இறக்குமதி செய்யும் 2-வது நாடாகும்.
இறக்குமதி செய்யப்படும் இந்த பொருட்களுக்கு, இறக்குமதியாளர்கள் செலுத்தும் வரியை கணக்கிடுவதற்கு ஏதுவாக ஒவ்வொரு 15 நாட்களுக்கும் ஒரு முறையும் மத்திய அரசு இறக்குமதி பொருட்களின் அடிப்படை விலையை திருத்தம் செய்கிறது.
அந்த வகையில் சர்வதேச சந்தையை பொறுத்து, கச்சா எண்ணெய், சுத்திகரிக்கப்பட்ட பாமாயில், சோயா எண்ணெய், தங்கம், வெள்ளியின் அடிப்படை இறக்குமதி விலையை மத்திய அரசு குறைத்திருக்கிறது. எனவே மத்திய அரசின் நடவடிக்கையால் தங்கம், சமையல் எண்ணெய் பொருட்களின் விலை குறையாலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.