< Back
தேசிய செய்திகள்
கோவா சட்டசபை: நாடாளுமன்ற சபாநாயகர் நிகழ்ச்சியை புறக்கணித்த எதிர்க்கட்சிகள்
தேசிய செய்திகள்

கோவா சட்டசபை: நாடாளுமன்ற சபாநாயகர் நிகழ்ச்சியை புறக்கணித்த எதிர்க்கட்சிகள்

தினத்தந்தி
|
16 Jun 2023 1:47 AM IST

கோவா சட்டசபையில் நாடாளுமன்ற சபாநாயகர் நிகழ்ச்சியை எதிர்க்கட்சிகள் புறக்கணித்தன.

பனாஜி,

பாரதீய ஜனதா கட்சி ஆளும் கோவா மாநிலத்தில் பிரமோத் சாவந்த் முதல்-மந்திரியாக உள்ளார். கோவா சட்டமன்றத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் நாடாளுமன்ற சபாநாயகர் ஓம் பிர்லா கலந்துகொண்டு பேசினார்.

இந்த நிகழ்ச்சியை காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் புறக்கணித்தன. ஆளும் பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் மட்டும் கலந்துகொண்டனர்.

இதுகுறித்து எதிர்க்கட்சி தலைவர் யுரி அலிமோ கூறுகையில், 'ராகுல் காந்தி தகுதி நீக்க விவகாரத்தில் ஓம் பிர்லாவின் நிலைப்பாட்டை கண்டித்து நிகழ்ச்சியை புறக்கணித்தோம்' என்று விளக்கம் அளித்தார்.

மேலும் செய்திகள்