< Back
தேசிய செய்திகள்
கள்ளக்காதலை தட்டிக்கேட்டதால் மனைவியை கடலில் மூழ்கடித்து கொலை செய்த கொடூர கணவன்
தேசிய செய்திகள்

கள்ளக்காதலை தட்டிக்கேட்டதால் மனைவியை கடலில் மூழ்கடித்து கொலை செய்த கொடூர கணவன்

தினத்தந்தி
|
21 Jan 2024 2:37 PM IST

மனைவி கடற்கரையில் மூழ்கி இறந்துவிட்டதாக நாடகமாடிய கணவனை போலீசார் கைது செய்தனர்.

கோவா,

கோவாவில் ஆடம்பர விடுதி ஒன்றில் மேலாளராக பணிபுரிபவர் கவுரவ் கட்டியார். இவருடைய மனைவி பெயர் திக்ஷா கங்வார் (வயது 27) இவர்களுக்கு ஒரு ஆண்டுக்கு முன் திருமணம் நடைபெற்றது. இந்தநிலையில் கவுரவிற்கு வேறுவொரு பெண்ணுடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது. இதனால் கணவன் - மனைவி இடையே சண்டை ஏற்பட்டது.

இதனிடையே நேற்று முன்தினம் மதியம் 3 மணி அளவில் கவுரவ் கட்டியார் மனைவியை கடற்கரைக்கு அழைத்து சென்று மூழ்கடித்துவிட்டு, தான் அருகில் இல்லாத நேரத்தில் கடற்கரையில் மூழ்கி விட்டதாக நாடகமாடி உள்ளார். ஆனால், அங்கிருந்த சுற்றுலா பயணி எடுத்த வீடியோவில் கவுரவ் கட்டியார் கடற்கரையிலிருந்து தனியாக வருவது தெரிய வந்ததையடுத்து, அவர் வசமாக சிக்கிக் கொண்டார்.

வீடியோவில், கடற்கரையில் பாறைகள் நிறைந்த பகுதிக்கு அழைத்துச் சென்று திக்ஷா கங்வாரை கடலில் மூழ்கடித்துள்ளார். கவுரவ் கட்டியார் கடற்கரையிலிருந்து வெளியே வந்து, தனது மனைவி உண்மையிலேயே இறந்துவிட்டாரா என்பதை உறுதிப்படுத்த மீண்டும் கடற்கரைக்கு திரும்புவதை காட்டுகிறது. அவரது உடலில் காயங்கள் இருப்பதை போலீசார் உறுதி செய்துள்ளனர்.

குற்றம் சாட்டப்பட்டவரும் உயிரிழந்த இளம்பெண்ணும் லக்னோவைச் சேர்ந்தவர்கள் என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக கவுரவ் கட்டியாரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகின்றது.

மேலும் செய்திகள்