< Back
தேசிய செய்திகள்
ரஷியாவில் இருந்து 244 பயணிகளுடன் கோவா வந்த விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் - அவசர அவசரமாக தரையிறக்கம்
தேசிய செய்திகள்

ரஷியாவில் இருந்து 244 பயணிகளுடன் கோவா வந்த விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் - அவசர அவசரமாக தரையிறக்கம்

தினத்தந்தி
|
9 Jan 2023 7:07 PM GMT

ரஷியாவில் இருந்து கோவா வந்த பயணிகள் விமானம் விமானப்படை தளத்தில் அவசர அவசரமாக தரையிறக்கப்பட்டது.

காந்திநகர்,

ரஷிய தலைநகர் மாஸ்கோவில் இருந்து 244 பணிகளுடன் புறப்பட்ட விமானம் நேற்று இரவு 10 மணியளவில் கோவா நோக்கி வந்துகொண்டிருந்தது.

விமானம் இந்திய எல்லைக்குள் நுழைந்த நிலையில் விமானத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாக குஜராத் விமான கட்டுப்பாட்டு அறைக்கு இமெயில் மூலம் மிரட்டல் வந்தது. இதையடுத்து, துரிதமாக செயல்பட்ட விமான கட்டுப்பாட்டு அறை ஊழியர்கள் உடனடியாக விமானிக்கு தகவல் தெரிவித்தனர்.

இந்த தகவலையடுத்து குஜராத்தின் ஜாம்நகரில் உள்ள இந்திய விமானப்படை தளத்தில் அவசர அவசரமாக தரையிறக்கப்பட்டது. மேலும், விமானத்தில் இருந்த பயணிகள் 244 பேரும் பத்திரமாக தரையிறக்கப்பட்டு பாதுகாப்பான இடத்திற்கு அழைத்து செல்லப்பட்டனர்.

இந்த வெடிகுண்டு மிரட்டலையடுத்து வெடிகுண்டு நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு விமானத்தில் சோதனை நடைபெற்று வருகிறது. மேலும், தேசிய பாதுகாப்பு படையினரும் விமானம் தரையிறக்கப்பட்ட விமானப்படை தளம் விரைந்துள்ளனர். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.

மேலும் செய்திகள்