காவிரி விவகாரத்தில் டெல்லிக்கு சென்று போராட்டம்
|காவிரி விவகாரத்தில் டெல்லிக்கு சென்று ேபாராட்டம் நடத்த விவசாய சங்கங்கள் முடிவு செய்துள்ளன.
சூரு
காவிரி நீர் திறப்பு
கர்நாடகத்தில் இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை ெபாய்த்து போனது. இதனால், அணைகள் முழுமையாக நிரம்பாமல் உள்ளது. ஆனாலும், தமிழகத்துக்கு காவிரியில் தண்ணீர் திறக்க காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி தமிழகத்துக்கு காவிரியில் தண்ணீர் திறந்துவிடப்பட்டு வருகிறது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடகத்தில் தொடர்ந்து போராட்டம் நடந்து வருகிறது. மண்டியா, பெங்களூருவை தொடர்ந்து நேற்று முன்தினம் கர்நாடகம் முழுவதும் முழுஅடைப்பு போராட்டம் நடந்தது.
மாநிலத்தில் காவிரி படுகையில் உள்ள ைமசூரு, மண்டியா மாவட்டங்களில் விவசாயிகள் தொடர்ந்து தீவிர போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
தொடர்ந்து அநீதி
இந்த நிலையில் நேற்று கர்நாடக மாநில விவசாய சங்க தலைவர் படகலபுரா நாகேந்திரா தலைமையில் மைசூருவில் விவசாய சங்கத்தினர் ஆலோசனை நடத்தினர். இந்த ஆலோசனை முடிந்ததும் படகலபுரா நாகேந்திரா நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
காவிரி நீர் விவகாரத்தில் கர்நாடகத்துக்கு தொடர்ந்து அநீதி இழைக்கப்பட்டு வருகிறது. காவிரி தண்ணீரை திறக்கக்கூடாது என கண்டித்து மண்டியா, பெங்களூரு மற்றும் கர்நாடகம் முழுவதும் தனித்தனியாக முழுஅடைப்பு போராட்டம் நடத்தினோம்.
ஆனால் காவிரி மேலாண்மை ஆணையம் விவசாயிகளின் உணர்வுகளை புரிந்துகொள்ளாமல், மேலும் தண்ணீர் திறந்து விட உத்தரவிட்டுள்ளது.
நாங்கள் அடி வாங்கி இவ்வளவு போராட்டம் நடத்தியும் சுப்ரீம் கோர்ட்டும், மத்திய அரசும் எங்களை கண்டுகொள்ளவில்லை. எங்கள் மீது யாரும் கருணை காட்டவில்லை.
டெல்லியில் போராட்டம்
இதனால் காவிரி விவகாரத்தில் டெல்லிக்கு சென்று காவிரி நீர் மேலாண்மை ஆணையம் முன்பு போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளோம். இவ்வளவு போராட்டம் நடத்தியும் முதல்-மந்திரி சித்தராமையா தண்ணீர் திறப்பதை நிறுத்த நடவடிக்கை எடுக்கவில்லை.
நம் மாநில மக்களின் நலனுக்காக கோர்ட்டு உத்தரவை மீறினால் தவறு கிடையாது. நாம் கோர்ட்டு உத்தரவை மீறினால் அணைகளை மத்திய அரசே எடுத்து கொள்ளும் என பயப்படுகிறார்கள்.
உங்களிடம் இருந்து அணைகளை சுப்ரீம் கோர்ட்டு, காவிரி மேலாண்மை ஆணையம் எடுத்து கொள்ளலாம். ஆனால் விவசாயிகளிடம் இருந்து அணைகளை எடுத்து கொள்ள முடியாது.
கர்நாடக எம்.பி.க்கள் காவிரி விவகாரத்தில் மவுனம் காப்பது ஏன். பிரதமர் மோடியிடம் இதுபற்றி ஏன் பேசவில்லை. நாங்கள் டெல்லிக்கு சென்று போராட முடிவு செய்துள்ளோம். எங்களுக்கு கர்நாடக எம்.பி.க்கள் ஆதரவு தெரிவிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.