< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
உலக பசி குறியீட்டு பட்டியல்: மத்திய அரசு நிராகரிப்பு
|16 Oct 2022 12:41 AM IST
உலக பசி குறியீட்டு பட்டியல் தவறானது என கூறி மத்திய அரசு நிராகரித்துள்ளது.
உலக பசி குறியீட்டு பட்டியல் வெளியாகி உள்ளது. இதில் 121 நாடுகளில் இந்தியா 107-வது இடத்தில் இருப்பதாக தெரிய வந்துள்ளது. பாகிஸ்தான், வங்காளதேசம், நேபாளம், இலங்கை போன்ற அண்டை நாடுகளை விட இந்தியா மோசமான நிலையில் இருப்பதாக பட்டியல் சொல்கிறது. இது அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.
ஆனால் இந்த உலக பசி குறியீட்டு பட்டியல் தவறானது என கூறி மத்திய அரசு நிராகரித்துள்ளது.
இதுபற்றி மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சகம் விடுத்துள்ள அறிக்கையில்," இந்தியா தனது மக்கள் தொகையின் உணவு பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்து தேவைகளை பூர்த்தி செய்யாத ஒரு நாடு என கூறி, நாட்டின் பிம்பத்தைக் கெடுக்கும் தொடர்ச்சியான முயற்சியின் ஒரு பகுதி ஆகும். இதில் தீவிரமான வழிமுறை பிரச்சினைகள் உள்ளன. இது பசியின் தவறான அளவீடு ஆகும்" என கூறப்பட்டுள்ளது.