< Back
தேசிய செய்திகள்
காசி பயணம்: மிக்க மகிழ்ச்சி...விஷாலுக்கு பதில் அளித்த பிரதமர் மோடி...!
தேசிய செய்திகள்

காசி பயணம்: மிக்க மகிழ்ச்சி...விஷாலுக்கு பதில் அளித்த பிரதமர் மோடி...!

தினத்தந்தி
|
3 Nov 2022 1:31 PM IST

நடிகர் விஷால் தெரிவித்த கருத்துக்கு பிரதமர் மோடி தனது மகிழ்ச்சியை தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

நடிகர் விஷால் கடந்த சில நாள்களுக்கு முன் காசிக்கு ஆன்மிகப் பயணம் மேற்கொண்டார். நண்பர்களுடன் இணைந்து காசியின் வீதிகளில் கோஷம் எழுப்பியவாறு அவர் சென்ற விடியோ வைரலானது. அதனைத் தொடர்ந்து, விஷால் தனது டுவிட்டர் பக்கத்தில்,

'அன்புள்ள மோடிஜி, நான் காசிக்கு சென்று சிறப்பான தரிசனத்தைப் பெற்றதுடன் கங்கையின் புனித நீரைத் தொட்டேன். கோவிலைப் புதுப்பித்து அதை இன்னும் சிறப்பாக மாற்றியதுடன் எவரும் எளிதாக வரும்படி செய்ததற்காக கடவுள் உங்களை ஆசீர்வதிக்கட்டும்' என பதிவிட்டிருந்தார்.

அதைப் பகிர்ந்த பிரதமர் மோடி 'காசியில் உங்களுக்கு அற்புதமான அனுபவம் கிடைத்ததில் மகிழ்ச்சி' என பதிலளித்துள்ளார்.

மேலும் செய்திகள்