< Back
தேசிய செய்திகள்
ஐ லவ் யூ சொல்லச் சொன்ன கடைக்காரர்.. ‘பளார் பளார்’ என அறைந்த மாணவிகள்
தேசிய செய்திகள்

'ஐ லவ் யூ' சொல்லச் சொன்ன கடைக்காரர்.. 'பளார் பளார்' என அறைந்த மாணவிகள்- வீடியோ

தினத்தந்தி
|
2 Sept 2024 11:01 AM IST

வீடியோவை பார்த்த பலரும், மாணவிகளின் தைரியத்தை பாராட்டி உள்ளனர்.

ராஜஸ்தான் மாநிலம், திட்வானா-குச்சமான் மாவட்டம், குச்சமான் நகரில் உள்ள ஒரு செல்போன் கடைக்கு மாணவிகள் சிலர் நேற்று ரீசார்ஜ் செய்ய சென்றுள்ளனர். அப்போது கடையின் உரிமையாளர் மாணவிகளிடம் தவறாக நோக்கத்துடன் பேசியிருக்கிறார்.

போனை ரீசார்ஜ் செய்ய வந்த மாணவிகளிடம், முதலில் 'ஐ லவ் யூ' சொல்லுங்கள், பின்னர் ரீசார்ஜ் செய்கிறேன் என்று கூறியிருக்கிறார். இதனால் ஆத்திரமடைந்த மாணவிகள், கடை உரிமையாளரை வெளியே இழுத்து வந்து அடித்துள்ளனர். பின்னர் அப்பகுதி இளைஞர்களின் உதவியுடன் கடை உரிமையாளரை காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.

கடை உரிமையாளரை மாணவிகள் அடித்தது தொடர்பான வீடியோ, சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. வீடியோவை பார்த்த பலரும், மாணவிகளின் தைரியத்தை பாராட்டி உள்ளனர்.

மேலும் செய்திகள்