தாத்தாவுக்கு பிடித்த உணவை ஆசையாய் சமைத்து வெளிநாட்டிலிருந்து எடுத்து வந்த பேத்திக்கு காத்திருந்த அதிர்ச்சி! வைரலாகும் வீடியோ
|உண்மையில் அவருடைய பேத்தி அந்த தத்தாவுக்காக தயாரித்த கடைசி உணவாக மாறிவிட்டது.
மும்பை,
ருன்ஜுன் மிஸ்ரா என்ற ஒரு மருத்துவர் தனது தாத்தாவுக்காக மேற்கண்ட சம்பவத்தை சமூக வலைதளமான, இன்ஸ்டாகிராமில் ஒரு வீடியோவாக பகிர்ந்து கொண்டார்.
இந்திய உணவை மட்டுமே விரும்பி உண்ணும் தன் தாத்தாவுக்கு மெக்சிகன் சாப்பாடு செய்து கொடுத்தார் அவருடைய பேத்தி. அந்த உணவை விரும்பி ருசித்து உண்டு மகிழ்ந்தார் தாத்தா.மேலும் இதுபோன்ற வித்தியாசமான உணவு வகைகளை முயற்சிக்க விரும்பினார்.
இருப்பினும், தனது பேத்தியின் அடுத்த இந்திய பயணத்திற்கு முன்பே அவர் காலமானார். எதிர்பாராதவிதமாக, அது உண்மையில் அவருடைய பேத்தி அந்த தத்தாவுக்காக தயாரித்த கடைசி உணவாக மாறிவிட்டது.
இது குறித்து அவர் கூறியிருப்பதாவது, "என் நானா (தாய்வழி தாத்தா), காரமான உணவுகளை விரும்புவதில்லை. ஆனால் நான் அடுத்த முறை அவரை காண் இந்தியாவில் இருக்கும் வீட்டிற்கு வரும்போது நான் அருமையாக சமைக்கும் உணவான 'அடோபோ சாஸ், சிபொட்டில் மிளகுத்தூள் தூக்கலாக' செய்து, அவருக்காக கூடுதலாக இன்னும் சில டப்பாக்களில் அடைத்து கொண்டு வரச் சொன்னார்.
ஆனால் அவர் மறைந்துவிட்டார். இதை காண்பவர்கள் உங்கள் தாத்தா-பாட்டிக்களை அணைத்து கொள்ளுங்கள்!" என்று பதிவிட்டுள்ளார்.
இந்த இன்ஸ்டாகிராம் பதிவை பார்த்த பலரும் வருத்தமடைந்துள்ளனர். சுமார் 4 லட்சம் பேர் இந்த பதிவை பார்த்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.