< Back
தேசிய செய்திகள்
3 நாட்களுக்கும் மேலாக சிறுமிக்கு பாலியல் தொல்லை: ஐதராபாத்தில் அதிர்ச்சி சம்பவம்..!
தேசிய செய்திகள்

3 நாட்களுக்கும் மேலாக சிறுமிக்கு பாலியல் தொல்லை: ஐதராபாத்தில் அதிர்ச்சி சம்பவம்..!

தினத்தந்தி
|
11 Jun 2022 2:21 PM IST

ஐதராபாத்தில் தொடர்ந்து மூன்று நாட்களுக்கும் மேலாக பாலியல் தொல்லை கொடுத்த நபரை போலீசார் கைது செய்தனர்.

ஐதராபாத்,

ஐதராபாத்தில் தொடர்ந்து மூன்று நாட்களுக்கும் மேலாக பாலியல் தொல்லை கொடுத்த நபரை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்டுள்ள நபருக்கு ஏற்கெனவே திருமணமாகி குழந்தைகள் உள்ள நிலையில், குடும்பத்தகராறு காரணமாக அவரது மனைவி தனியே பிரிந்து சென்றுவிட்டார்.

இந்த சமயத்தில் வீட்டின் அருகே வசிக்கும் சிறுமியை அழைத்து தனக்கு சிகரெட் வாங்கித்தருமாறு கூறிய அந்த நபர், சிறுமியை வீட்டிற்குள் அழைத்துச்சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

இது தொடர்பாக சிறுமியில் வாக்குமூலத்தை பெற்றுக்கொண்ட போலீசார், குற்றம் சாட்டப்பட்ட நபரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

மேலும் செய்திகள்