கோழிக்கோட்டில் பறவைக்காய்ச்சலுக்கு 12 வயது சிறுமி பலி
|கேரள மாநிலம் கோழிக்கோட்டில் பறவைக்காய்ச்சலுக்கு 12 வயது சிறுமி ஒருவர் பலியாகி உள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கோழிக்கோடு,
கேரளாவில் நாளுக்குநாள் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. ஆனால் கோழிக்கோடு மாவட்டத்தில் பறவைக்காய்ச்சல் பரவுவது சுகாதாரத்துறையினருக்கு தெரியவந்தது. இதையடுத்து மாநில சுகாதாரத்துறையினர் கோழிக்கோடு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பறவைக்காய்ச்சல் அறிகுளி உள்ளதா என்பது குறித்து ஆய்வு செய்தனர்.
மேலும் அங்கு காய்ச்சல் அறிகுறி உள்ளவர்களின் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டது. மேலும் அங்குள்ள கோழிப்பண்ணைகளிலும் அதிகாரிகள் சோதனை செய்தனர்.
இந்தநிலையில் கோழிக்கோடு பகுதியை சேர்ந்த 12 வயதான இரட்டை சகோதரிகளுக்கு லேசான காய்ச்சல் ஏற்பட்டது. இதனால் அவர்கள் 2 பேரும் அந்தப்பகுதியில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. மேலும் அவர்களின் ரத்த மாதிரிகள் ஆய்வுக்கான எடுக்கப்பட்டன.
இந்தநிலையில் சிறுமி ரிது நந்தா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தாள். மேலும், அவரின் ரத்த மாதிரிகளில் சிறுமி ரிது நந்தாவுக்கு பறவை காய்ச்சல் இருந்தது தெரியவந்தது. பறவை காய்ச்சலுக்கு சிறுமி இறந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. மேலும் சுகாதாரத்துறையினர் தடுப்பு நடவடிக்கைகளை முடுக்கி விட்டு உள்ளனர்.