< Back
தேசிய செய்திகள்
மத்திய பிரதேசத்தில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுமி - மீட்பு பணி தீவிரம்
தேசிய செய்திகள்

மத்திய பிரதேசத்தில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுமி - மீட்பு பணி தீவிரம்

தினத்தந்தி
|
29 July 2024 10:41 PM IST

ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்த சிறுமியை மீட்கும் பணி வேகமாக நடைபெற்று வருகிறது.

போபால்,

மத்திய பிரதேச மாநிலம் சிங்ராலி மாவட்டத்தை சேர்ந்தவர் பிந்து சாகு. இவரது 3 வயது மகள், வயலில் விளையாடிக்கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக அங்கு மூடப்படாமல் இருந்த ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்தாள்.

இந்த சம்பவம் குறித்து உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் விரைந்து வந்த போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர், சிறுமியை விரைவாக மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல்துறை கண்காணிப்பாளர் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்துள்ளனர். மேலும், இதுகுறித்து அறிந்த உள்ளூவாசிகளும் அங்கு திரண்டுள்ளனர்.

ஆழ்துளை கிணறு 250 அடி ஆழத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. சிறுமியை மீட்க விரைந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அதிகாரி ஒருவர் கூறினார்.

மேலும் செய்திகள்