< Back
தேசிய செய்திகள்
தானே கிரேன் விபத்து - பலி எண்ணிக்கை 20ஆக உயர்வு
தேசிய செய்திகள்

தானே கிரேன் விபத்து - பலி எண்ணிக்கை 20ஆக உயர்வு

தினத்தந்தி
|
1 Aug 2023 9:15 PM IST

மராட்டியத்தில் தானே அருகே கிரேன் விழுந்த விபத்தில் பலி எண்ணிக்கை 20 ஆக உயர்ந்துள்ளது.

தானே,

தானே அருகே மும்பை நாக்பூரை இணைக்கும் பிரதான சாலையில் சாலைப்பணியில் ஈடுபட்டு வந்த கிரேன் விழுந்து விபத்து ஏற்பட்டது. இதில் 20 பேர் உயிரிழந்தனர். இவ்விபத்தில் சிக்கியுள்ள 6 பேரை மீட்கும் பணி விரைவாக நடைபெற்று வருகிறது.

இதன் இடையே, இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களில் இரண்டு பேர் தமிழர்கள் என தெரியவந்துள்ளது. கிருஷ்ணகிரியைச் சேர்ந்த சந்தோஷ் மற்றும் திருவள்ளூரைச் சேர்ந்த கண்ணன் ஆகியோர் விபத்தில் உயிரிழந்துள்ளனர்.

இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு பிரதமரின் நிவாரண நிதியில் இருந்து தலா ரூ.2 லட்சம் வழங்கப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார். காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் நிவாரண நிதி வழங்கவும் பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார்.

மேலும் செய்திகள்