< Back
தேசிய செய்திகள்
ஜனாதிபதி திரவுபதி முர்முவின் சொந்த ஊருக்கு முதல் ரெயில்
தேசிய செய்திகள்

ஜனாதிபதி திரவுபதி முர்முவின் சொந்த ஊருக்கு முதல் ரெயில்

தினத்தந்தி
|
19 Oct 2023 2:14 AM IST

ஜனாதிபதி திரவுபதி முர்முவின் சொந்த ஊருக்கு முதல் ரெயில் இயக்கப்பட்டது.

புவனேஸ்வர்,

ஒடிசா மாநிலத்தில் பழங்குடியினர் நிறைந்த மயூர்பஞ்ச் மாவட்டத்தில் உள்ள ராய்ரங்பூர்தான் ஜனாதிபதி திரவுபதி முர்முவின் சொந்த ஊராகும்.

இந்த நிலையில் தென்கிழக்கு ரெயில்வேயில் 4 புதிய ரெயில்களை இயக்குவதற்கு ரெயில்வே துறை ஒப்புதல் அளித்துள்ளது.

அவற்றில் 3 ரெயில்கள் மயூர்பஞ்ச் மாவட்டத்துக்கு இயக்கப்படும். இதனால் ஜனாதிபதி திரவுபதி முர்முவின் சொந்த ஊரான ராய்ரங்பூர் முதல்முறையாக பயணிகள் ரெயில் வசதி பெறுகிறது.

இந்த தடத்தில் மெயில் அல்லது எக்ஸ்பிரஸ் பயணிகள் ரெயில் இயக்கப்படுவது இதுவே முதல்முறை என ரெயில்வே மந்திரி அஷ்வினி வைஷ்ணவ் வௌியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் அந்தப் பகுதி மக்களின் நீண்டநாள் கோரிக்கை நிறைவேறியுள்ளது. இது மலைப்பகுதி மேம்பாட்டுக்கும், பொருளாதார வளர்ச்சிக்கும் உதவும் என்றும் அவர் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்