< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
குலாம் நபி ஆசாத்தைத் தொடர்ந்து காஷ்மீர் காங்கிரஸ் தலைவர்கள் விலகல்
|27 Aug 2022 5:13 AM IST
குலாம் நபி ஆசாத்தைத் தொடர்ந்து காஷ்மீர் காங்கிரஸ் தலைவர்கள் 5 பேர் கட்சியில் இருந்து விலகியுள்ளனர்.
ஸ்ரீநகர்,
காஷ்மீர் முன்னாள் முதல்-மந்திரியான குலாம் நபி ஆசாத், காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகியுள்ளார்.
இதையடுத்து அங்கு மூத்த தலைவர்கள் பலரும் காங்கிரசில் இருந்து ராஜினாமா செய்துள்ளனர்.
காங்கிரசில் இருந்து விலகியவர்களில் முன்னாள் மந்திரிகள் ஆர்.எஸ்.சிப், ஜி.எம்.சரூரி, மூத்த தலைவர்கள் சவுத்ரி முகமது அக்ரம், முகமது அமின் பத், குல்சார் அகமது ஆகியோர் முக்கியமானவர்கள் ஆவார்கள்.
இன்னொரு மூத்த தலைவரான சைபுதீன் சோஸ், "குலாம் நபி ஆசாத் பிரச்சினைகளை கட்சிக்குள் பேசி தீர்த்து கொண்டிருக்க வேண்டும். காங்கிரஸ் கட்சியில் அவருக்கு கிடைத்த மரியாதை, வேறெங்கும் கிடைக்காது" என கருத்து தெரிவித்துள்ளார்.