< Back
தேசிய செய்திகள்
துணை ஜனாதிபதியுடன் குலாம் நபி ஆசாத் சந்திப்பு
தேசிய செய்திகள்

துணை ஜனாதிபதியுடன் குலாம் நபி ஆசாத் சந்திப்பு

தினத்தந்தி
|
19 Aug 2022 4:17 AM IST

துணை ஜனாதிபதியை காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான குலாம் நபி ஆசாத் சந்தித்துப் பேசினார்.


புதுடெல்லி,

இந்தியாவின் துணை ஜனாதிபதியும், மாநிலங்களவை தலைவருமான ஜெகதீப் தன்கரை, டெல்லியில் உள்ள அவரது இல்லத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரும், காஷ்மீரின் முன்னாள்-முதல் மந்திரியுமான குலாம் நபி ஆசாத் நேற்று சந்தித்துப் பேசினார்.

இந்த தகவல் துணை ஜனாதிபதி அலுவலகத்தின் டுவிட்டர் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குலாம் நபி ஆசாத், மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவராக இருந்தவர், காங்கிரஸ் தலைமைக்கு எதிராக போர்க்கொடி உயர்த்திய 23 பேர் குழுவில் ஒருவர் என்பது நினைவுகூரத்தக்கது.

மேலும் செய்திகள்