< Back
தேசிய செய்திகள்
தாவணகெரேவில் ஆம்புலன்ஸ் சேவை பெற 108 உதவி மைய எண்ணுக்கு பதிலாக 112-ஐ அழையுங்கள்
தேசிய செய்திகள்

தாவணகெரேவில் ஆம்புலன்ஸ் சேவை பெற 108 உதவி மைய எண்ணுக்கு பதிலாக 112-ஐ அழையுங்கள்

தினத்தந்தி
|
27 Sept 2022 12:30 AM IST

தாவணகெரேவில் ஆம்புலன்ஸ் சேவை பெற 108 உதவி மைய எண்ணுக்கு பதிலாக 112-ஐ அழைக்குமாறு பொதுமக்களுக்கு சுகாதாரத்துறை அதிகாரி நாகராஜ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தாவணகெரே;

108 உதவி எண் முடக்கம்

கர்நாடகத்தில் 108 ஆம்புலன்ஸ் சேவை முடங்கியிருப்பதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளது. அதாவது 108 என்ற அவசர உதவி எண்ணை தொடர்பு கொண்டு பேசினால், அவை அணைத்து வைக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. மேலும் பயன்பாட்டில் இருந்தாலும், ஆம்புலன்ஸ் வாகனங்கள் முறையாக சேவை செய்வது இல்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இந்நிலையில் தாவணகெரே சுற்றுவட்டாரப்பகுதியில் 108 ஆம்புலன்ஸ் சேவை கிடைக்காமல் அவதிப்பட்டு வந்த பொதுமக்களுக்கு மாவட்ட நிர்வாகம் புதிய நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. கடந்த சில நாட்களாக இந்த மாவட்டத்தில் 108 ஆம்புலன்சிற்கு பொதுமக்கள் அழைப்பு விடுத்துள்ளனர். ஆனால் அந்த 108 எண் கிடைக்கவில்லை. இதனால் வாடகை வாகனங்களில் பொதுமக்கள் ஆஸ்பத்திரிக்கு செல்லவேண்டிய நிலை ஏற்பட்டது.

புதிய எண் வழங்கப்பட்டது

இதனால் மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரி நாகராஜிடம் இது குறித்து புகார் அளிக்கப்பட்டது. அவர் உடனே விசாரணை நடத்தினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில், '108 உதவி மையத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறை கம்ப்யூட்டரில் உள்ள சர்வர்போர்டு பழுதடைந்துள்ளதாக கூறப்படுகிறது. அந்த சர்வர் போர்டை சரி செய்துவிட்டு அதற்கு பதிலாக மாற்று போர்டை பொருத்தும் பணிகள் நடந்து வருகிறது.

அதுவரை 108-க்கு பதிலாக 112 என்ற எண்ணை அழைத்து ஆம்புலன்ஸ் சேவையை பெறலாம். மீண்டும் 108 உதவி எண் செயல்பட சில நாட்கள் ஆகும். அதுவரை பொதுமக்கள் சுகாதாரத்துறைக்கு ஒத்துழைப்பு அளிக்கவேண்டும்' என்று கேட்டு கொண்டார்.

மேலும் செய்திகள்