< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
அரசு முறை பயணமாக இந்தியா வருகிறார் ஜெர்மனி பிரதமர்...!
|20 Feb 2023 5:57 PM IST
அரசு முறை பயணமாக ஜெர்மனி பிரதமர் வரும் 25-ம் தேதி இந்தியா வர உள்ளார்.
புதுடெல்லி,
ஜெர்மனி பிரதமர் ஒலப் ஸ்கோல்ஸ். இவர் 2 நாள் அரசு முறை பயணமாக இந்த வார இறுதியில் இந்தியா வருகிறார். வரும் 25-ம் தேதி (சனிக்கிழமை) இந்தியா வரும் ஒலப் ஸ்கோல்ஸ் இந்திய பிரதமர் மோடியை சந்திக்கிறார். இந்த சந்திப்பின் போது இருநாட்டு தலைவர்களும் வர்த்தகம், இருநாட்டு உறவு உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசிக்க உள்ளனர்.
ஒலப் ஸ்கோல்ஸ் 26-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) பெங்களூருவில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். இந்த பயணத்தின் போது ஜெர்மனி - இந்திய தொழில்துறையினர் இடையே ஆலோசனைகளும் நடைபெற உள்ளது.
இருநாட்டு தொழில்துறை தலைவர்கள், தொழிலதிபர்களுடன் இந்திய பிரதமர் மோடி மற்றும் ஜெமனி பிரதமர் ஸ்கோல்ஸ் கலந்துரையாட உள்ளனர். 2 நாள் பயணத்தை முடித்துக்கொண்டு 26-ம் தேதி இரவு ஒலப் ஸ்கோல்ஸ் ஜெர்மனி புறப்பட்டு செல்ல உள்ளார்.