பொது சிவில் சட்டம் - 9 லட்சம் கருத்துகள் பதிவு
|ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகள் இந்த சட்டத்திற்கு ஆதரவு தந்துள்ளன.
புதுடெல்லி,
பொது சிவில் சட்டம் குறித்து நாட்டு மக்கள் உட்பட அனைத்து தரப்பினரும் தங்கள் கருத்துகளை ஜூலை 14-ஆம் தேதிக்குள் தெரிவிக்கலாம் என்று சட்ட ஆணையம் அறிவித்திருந்தது.
இதுதொடர்பாக, இதுவரை சுமார் 9 லட்சம் கருத்துகள் பதிவாகி இருப்பதாகக் கூறப்படும் நிலையில், ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகள் இந்த சட்டத்திற்கு ஆதரவு தந்துள்ளன.
இதனிடையே, சட்டம் மற்றும் நீதித் துறைக்கான நாடாளுமன்ற நிலைக் குழுவின் ஆலோசனைக் கூட்டம் டெல்லியில் நேன்று நடைபெற்றது. அந்த கூட்டத்தில் கலந்து கொண்ட திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள், பொது சிவில் சட்டத்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தன.
தேர்தலுக்கு 300 நாட்களே இருக்கும் நிலையில் பொது சிவில் சட்டத்துக்கான அவசரம் என்ன என்றும் அந்த கட்சிகள் கேள்வி எழுப்பின. இந்த விவகாரத்தில் பல்வேறு விளக்கங்கள் தேவைப்படுவதால், தற்போதைய நிலையில் விவாதமே தேவையில்லை என்றும் எதிர்க்கட்சிகள் கருத்து தெரிவித்தன. இந்த கூட்டத்தில், தேசியவாத காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் பங்கேற்கவில்லை எனத் தகவல் வெளியாகி உள்ளது.