< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
யார் காங். தலைவர் ஆனாலும் கைப்பாவையாகவே இருப்பார்கள் - பா.ஜனதா கணிப்பு
|22 Sept 2022 2:31 AM IST
அசோக் கெலாட்டோ அல்லது சசிதரூரோ யார் காங். தலைவர் ஆனாலும் கைப்பாவையாகவே இருப்பார்கள் என்று பா.ஜனதா கணித்துள்ளது.
புதுடெல்லி,
பா.ஜனதா தேசிய செய்தித்தொடர்பாளர் டாம் வடக்கன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-
காங்கிரஸ் நடத்தும் இந்திய ஒற்றுமை யாத்திரையை ஊழல் ஒற்றுமை யாத்திரை என்றுதான் அழைக்க வேண்டும். ஏனென்றால், கன்னியாகுமரியில் 2ஜி கூட்டாளியான தி.மு.க.வின் ஆசியுடன் இந்த யாத்திரை தொடங்கியது.
அசோக் கெலாட்டோ அல்லது சசிதரூரோ யார் காங்கிரஸ் தலைவராக அமர்ந்தாலும், அவர்கள் கைப்பாவையாகவே இருப்பார்கள். பிரதான ஓட்டுனரான ராகுல்காந்தி, பின்னால் அமர்ந்து இயக்குவார்.
இவ்வாறு அவர் கூறினார்.