< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
ஆசிய பணக்காரர்கள் பட்டியலில் முகேஷ் அம்பானியை பின்னுக்கு தள்ளி கவுதம் அதானி மீண்டும் முதலிடம்
|5 Jan 2024 8:36 PM IST
அதானியின் நிகர மதிப்பு ஒரே நாளில் 7.6 பில்லியன் டாலர் அதிகரித்து, தற்போது 97.6 பில்லியன் டாலராக உள்ளது.
புதுடெல்லி,
புளூம்பெர்க் நிறுவனம் வெளியிட்டுள்ள ஆசியாவின் மிகப்பெரிய பணக்காரர்கள் பட்டியலில், முகேஷ் அம்பானியை பின்னுக்குத் தள்ளி கவுதம் அதானி மீண்டும் முதலிடம் பிடித்துள்ளார். முகேஷ் அம்பானி 97 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் ஆசிய பணக்காரர்கள் பட்டியலில் இரண்டாவது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார்.
அதானியின் நிகர மதிப்பு ஒரே நாளில் 7.6 பில்லியன் டாலர் அதிகரித்து, தற்போது 97.6 பில்லியன் டாலராக உள்ளது. ஹிண்டர்பர்க் அறிக்கை தொடர்பான வழக்கில் அதானி குழுமத்துக்கு சாதகமாக சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியதையடுத்து, பங்குச் சந்தையில் அதானி குழுமத்தின் பங்குகள் வேகமாக அதிகரித்துள்ளன.