< Back
தேசிய செய்திகள்
விமான நிலையத்தில் கஞ்சா கடத்தல்: அதிகாரி உட்பட 2 பேர் கைது
தேசிய செய்திகள்

விமான நிலையத்தில் கஞ்சா கடத்தல்: அதிகாரி உட்பட 2 பேர் கைது

தினத்தந்தி
|
28 Nov 2023 2:33 AM IST

ரூ.2 லட்சம் மதிப்புடைய 40 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.

அகர்தலா,

திரிபுரா தலைநகர் அகர்தலாவில் உள்ள மகாராஜா பிர் பிக்ரம் விமானநிலையத்தில் விமானம் மூலம் கஞ்சா கடத்தப்பட இருப்பதாக போலீசாருக்கு துப்பு கிடைத்தது. அதன்பேரில் தனிப்படை அமைத்து விமானநிலையத்திற்குள் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் ஒருவர் விமான நிலைய வளாகத்திற்குள் சுற்றி வருவது தெரிந்தது. அவரை பிடித்து உடமைகளை சோதனை செய்ததில் கஞ்சாவை மறைத்து வைத்திருந்தது தெரிந்தது. அவரிடம் இருந்த ரூ.2 லட்சம் மதிப்புடைய 40 கிலோ கஞ்சாவை போலீசார் கைப்பற்றினர்.

விசாரணையில் விமான நிலைய பாதுகாப்பு அதிகாரி ஒருவர், கஞ்சா கடத்த உதவ முயற்சித்தது தெரிந்தது. இதனை தொடர்ந்து, விமானநிலைய அதிகாரி உள்பட 2 பேரும் கைது செய்யப்பட்டனர். இருவரிடமும் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

மேலும் செய்திகள்