< Back
தேசிய செய்திகள்
டேராடூனில் பஸ்சில் சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை - டிரைவர், கண்டக்டர் உள்பட 5 பேர் கைது
தேசிய செய்திகள்

டேராடூனில் பஸ்சில் சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை - டிரைவர், கண்டக்டர் உள்பட 5 பேர் கைது

தினத்தந்தி
|
18 Aug 2024 6:20 PM IST

டேராடூனில் சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் பஸ் டிரைவர், கண்டக்டர் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

டேராடூன்,

உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் உள்ள ஐ.எஸ்.பி.டி. பேருந்து நிலையத்தில், கடந்த 13-ந்தேதி சிறுமி(வயது 16) ஒருவர் நீண்ட நேரம் தனியாகவும், சோர்வாகவும் அமர்ந்திருந்தார். இது குறித்து அங்கிருந்தவர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். மிகவும் பயந்த நிலையில் அமர்ந்திருந்த அந்த சிறுமியை குழந்தைகள் நலக்குழுவினர் மீட்டு அழைத்துச் சென்றனர்.

முதலில் அந்த சிறுமி எதுவும் பேசாமல் இருந்துள்ளார். பின்னர் அவருக்கு கவுன்சிலிங் வழங்கப்பட்ட நிலையில், தன்னை சிலர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துவிட்டதாக அச்சிறுமி தெரிவித்துள்ளார். இது குறித்து உடனடியாக ஐ.எஸ்.பி.டி. காவல்நிலையத்தில் குழந்தைகள் நலக்குழுவினர் புகார் அளித்தனர்.

இதையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில், அந்த சிறுமி பஞ்சாப் மாநிலம் மொரதாபாத் பகுதியைச் சேர்ந்தவர் என்பதும், பஞ்சாப்பில் இருந்து டெல்லி சென்றுவிட்டு பின்னர் மொரதாபாத் திரும்புகையில் டேராடூன் பேருந்து நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்ட பஸ்சில் இந்த கூட்டு பாலியல் வன்கொடுமை சம்பவம் அரங்கேறியுள்ளது என்பதும் தெரியவந்தது.

மேலும் இது தொடர்பாக தீவிர விசாரணை நடத்திய போலீசார், சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த பஸ் டிரைவர், கண்டக்டர் உள்பட 5 பேரை கைது செய்தனர். மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய மற்றொரு நபர் குறித்து சி.சி.டி.வி. காட்சிகளின் அடிப்படையில் விசாரணை நடத்தி வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

Related Tags :
மேலும் செய்திகள்