< Back
தேசிய செய்திகள்
சூதாட்டம்; கவுன்சிலர் உள்பட 10 பேர் கைது
தேசிய செய்திகள்

சூதாட்டம்; கவுன்சிலர் உள்பட 10 பேர் கைது

தினத்தந்தி
|
8 Aug 2022 9:02 PM IST

தார்வாரில் சூதாட்டத்தில் ஈடுபட்ட கவுன்சிலர் உள்பட 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

உப்பள்ளி;


தார்வார் டவுன் போசப்பா சர்க்கிள் அருகே மேதார் ஓனியில் சூதாட்டம் நடப்பதாக நேற்றுமுன்தினம் இரவு டவுன் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சோதனை நடத்தினர்.

அப்போது அங்கு உப்பள்ளி-தார்வார் மாநகராட்சி மாநகராட்சி 17-வது வார்டு கவுன்சிலர் கணேஷ் முத்தோல்(வயது 40) உள்பட 10 பேர் சூதாட்டத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 10 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

அவர்களிடமிருந்து 1.10 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது. கைதான 10 பேரும் நேற்று தார்வார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்