< Back
தேசிய செய்திகள்
ககன்யான் திட்டத்திற்கான வரைபடம் தயாராக உள்ளது - சந்திரயான்-3 திட்ட இயக்குனர் வீரமுத்துவேல் தகவல்
தேசிய செய்திகள்

ககன்யான் திட்டத்திற்கான வரைபடம் தயாராக உள்ளது - சந்திரயான்-3 திட்ட இயக்குனர் வீரமுத்துவேல் தகவல்

தினத்தந்தி
|
8 Oct 2023 8:16 AM IST

ககன்யான் திட்டம் விரைவில் தொடங்கப்படும் என்று சந்திரயான்-3 திட்டத்தின் இயக்குனர் வீரமுத்துவேல் தெரிவித்துள்ளார்.

திருச்சி,

சந்திரயான்-3 மற்றும் ஆதித்யா- எல் 1 ஆகியவற்றின் வெற்றிக்கு பின்னர் இந்தியா தற்போது மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் திட்டத்தில் பணிபுரிந்து வருகின்றது. இந்நிலையில் அதற்கான திட்ட வரைபடம் தயாராக உள்ளதாக சந்திரயான்-3 திட்டத்தின் இயக்குனர் வீரமுத்துவேல் தெரிவித்துள்ளார்.

திருச்சியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர் கூறியதாவது, நிலவில் தரையிறங்கும் தொழில்நுட்பத்தை கொண்டுள்ள 4 வது நாடாக இந்தியா உள்ளது. இந்த தொழில் நுட்பத்தில் நாம் கைதேர்ந்தவர்கள் ஆகிவிட்டோம். இதன் மூலம்தான் நாம் மனிதர்களை விண்ணுக்கு அனுப்ப முடியும். மேலும் விரைவில் ககன்யான் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இந்த திட்டம் மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் முயற்சியாகும். அதற்கான திட்ட வரைபடம் தயாராக உள்ளது, என்று அவர் கூறினார்.

இஸ்ரோ சமீபத்தில் தனது எக்ஸ் தளத்தில்,"மிஷன் ககன்யான்: ககன்யான் திட்டத்திற்கான ஆளில்லா சோதனைகளை இஸ்ரோ தொடங்கவுள்ளது" என்று பதிவிட்டிருந்தது.

மேலும் செய்திகள்