< Back
தேசிய செய்திகள்
ஜி20 உச்சி மாநாட்டையொட்டி டெல்லியில் விமான போக்குவரத்திலும் கட்டுப்பாடு

கோப்புப்படம்

தேசிய செய்திகள்

'ஜி20' உச்சி மாநாட்டையொட்டி டெல்லியில் விமான போக்குவரத்திலும் கட்டுப்பாடு

தினத்தந்தி
|
27 Aug 2023 5:19 AM IST

‘ஜி20’ உச்சி மாநாட்டையொட்டி டெல்லியில் விமான போக்குவரத்திலும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

புதுடெல்லி,

'ஜி20' உச்சி மாநாடு தலைநகர் டெல்லியில் அடுத்த மாதம் 8-ந்தேதி முதல் 10-ந்தேதி வரை நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு டெல்லியில் போக்குவரத்தில் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன. இந்த கட்டுப்பாடுகள் விமான போக்குவரத்திலும் எதிரொலித்து உள்ளது.

மாநாட்டுக்கு வெளிநாட்டு தலைவர்கள் வர இருப்பதால் விமான நிலையத்தில் விமான பார்க்கிங் வசதி போதுமானதாக இருக்க வேண்டும் என்பதற்காக உள்நாட்டு விமானங்களின் எண்ணிக்கையை குறைக்குமாறு மத்திய அரசு வலியுறுத்தி இருப்பதாக தெரிகிறது. இதன்பேரில் சுமார் 250 விமானங்கள் ரத்து ஆகலாம் என தெரிவிக்கப்பட்டது.

இதற்கிடையில், 80 புறப்பாடு மற்றும் 80 வருகைக்கான விமானங்களை ரத்து செய்ய இருப்பதாக டெல்லி சர்வதேச விமான நிலைய நிறுவனத்துக்கு விமான நிறுவனங்கள் கடிதங்களை அனுப்பியுள்ளன. ஆனால் விமான நிலையத்தில் போதிய அளவு பார்க்கிங் இடம் இருப்பதாக விமான நிலைய நிறுவனம் தெரிவித்துள்ளது. இருந்தாலும் விமானங்களுக்கான கட்டுப்பாடு குறித்து இன்னும் ஓரிரு நாளில் சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் அதிகாரப்பூர்வமான அறிவிப்புகளை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் செய்திகள்