ஜி20 நாடுகளின் நிதித்துறை துணை மந்திரிகள், ரிசர்வ் வங்கி அதிகாரிகள் கூட்டம்; மத்திய மந்திரி அனுராக் தாக்கூர் இன்று தொடங்கி வைக்கிறார்
|ஜி20 நாடுகள் சபையின் நிதித்துறை துணை மந்திரிகள்-ரிசர்வ் வங்கி துணை கவர்னர்கள் கூட்டத்தை மத்திய மந்திரி அனுராக் தாக்கூர் இன்று தொடங்கி வைக்கிறார்.
பெங்களூரு:
ஜி20 நாடுகள் சபையின் நிதித்துறை துணை மந்திரிகள்-ரிசர்வ் வங்கி துணை கவர்னர்கள் கூட்டத்தை மத்திய மந்திரி அனுராக் தாக்கூர் இன்று தொடங்கி வைக்கிறார்.
ஆலோசனை கூட்டம்
ஜி20 நாடுகள் சபையின் நிதி மந்திரிகள்-ரிசர்வ் வங்கி கவா்னர்கள் கூட்டம் பெங்களூருவில் வருகிற 24-ந் தேதி தொடங்குகிறது. அதற்கு முன்னதாக நிதித்துறை இணை மந்திரிகள் மற்றும் துணை கவர்னர்கள் கூட்டம் பெங்களூருவில் இன்று(புதன்கிழமை) தொடங்குகிறது. இதுகுறித்து மத்திய அரசின் பொருளாதார விவகாரத்துறை அதிகாரி அஜய்சேட் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
ஜி20 நாடுகள் சபையின் நிதி மந்திரிகள் மற்றும் ரிசர்வ் வங்கி கவர்னர்கள் கூட்டம் வருகிற 24 மற்றும் 25-ந் தேதிகளில் பெங்களூருவில் நடக்கிறது. இதற்கு மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன், இந்திய ரிசர்வ் வங்கியின் கவர்னர் சக்திகாந்த தாஸ் ஆகியோர் கூட்டாக தலைமை தாங்குகின்றனர். இந்த கூட்டத்திற்கு முன்னதாக நிதித்துறை துணை மந்திரிகள், ரிசர்வ் வங்கி துணை கவர்னர்கள் கூட்டம் நாளை(இன்று) பெங்களூரு அருகே தேவனஹள்ளி பகுதியில் உள்ள ஒரு ஓட்டலில் தொடங்குகிறது. இந்த கூட்டத்திற்கு நான்(அஜய் சேட்), இந்திய ரிசர்வ் வங்கி துணை கவர்னர் மைக்கேல் பத்ரா ஆகியோர் தலைமை தாங்குகிறோம்.
பொருளாதார பிரச்சினைகள்
இந்த கூட்டத்தை மத்திய அரசின் இளைஞர் நலன், விளையாட்டுத்துறை மந்திரி அனுராக் தாக்கூர் தொடங்கி வைக்கிறார். இந்த கூட்டத்தில் ஜி20 நாடுகளின் உறுப்பினர்களின் நிதித்துறை துணை மந்திரிகள், ரிசர்வ் வங்கி துணை கவர்னர்கள் கலந்து கொள்கிறார்கள். மேலும் சர்வதேச அமைப்புகளின் நிாவாகிகள் உள்பட 72 பிரதிநிதிகள் கலந்து கொள்கின்றனர்.
இந்த கூட்டத்தில் சில முக்கிய உலக பொருளாதார பிரச்சினைகளை தீர்ப்பதற்கான நடைமுறை மற்றும் அர்த்தமுள்ள அணுகுமுறைகள் குறித்து விவாதிக்கப்படுகிறது. இதில் கலந்து கொள்ளும் பிரதிநிதிகள், கவா்னர்கள் இடையே அர்த்தமுள்ள கருத்து பரிமாற்றம் நடைபெற உள்ளது. 21-ம் நூற்றாண்டில் பகிரப்பட்ட உலகளாவிய சவால்களை எதிர்கொள்ள பலதரப்பு வளர்ச்சி வங்கிகளை வலுப்படுத்துதல், நெகிழ்வான, உள்ளடக்கிய மற்றும் நிலையான 'எதிர்கால நகரங்களுக்கு' நிதியளித்தல், டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பை மேம்படுத்துதல், நிதி உள்ளடக்கம் மற்றும் உலகளாவிய பொருளாதாரம், உலகளாவிய சுகாதாரம் மற்றும் சர்வதேச வரிவிதிப்பு தொடர்பான பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்பட உள்ளது.
கலந்துரையாடல்
மேலும் இந்த கூட்டத்தில் டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பு, கிரிப்டோ கரன்சி சொத்துக்களுக்கான கொள்கை கண்ணோட்டங்கள் மற்றும் எல்லை தாண்டிய தேசிய கட்டண முறைகளின் பங்கு போன்ற விஷயங்கள் குறித்து கலந்துரையாடல் நடக்கிறது. இந்தியாவின் பல்வேறு உணவு வகைகள் மற்றும் கலாசாரத்தை வெளிப்படுத்தும் வகையில், நிதி மந்திரிகள், ரிசர்வ் வங்கி கவர்னர்கள் மற்றும் பிரதிநிதிகளுக்கு கர்நாடக கலாசார நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
இந்த கூட்டத்தில் பங்கேற்கும் நிதி மந்திரிகள், ரிசர்வ் வங்கி கவர்னர்கள், இந்திய அறிவியல் கழகத்திற்கு வருகை தந்து, தொழில்நுட்ப கண்டுபிடிப்பாளர்கள் மற்றும் தொழில்முனைவோர்களுடன் கலந்துரையாடல் நடத்துகிறார்கள். அதைத்தொடர்ந்து வருகிற 26-ந் தேதி இந்த பிரதிநிதிகள் கர்நாடகாவின் அழகிய இயற்கை சூழல்களை பார்வையிட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு அஜய்சேட் ஜி20 நாடுகளின் நிதித்துறை துணை மந்திரிகள், ரிசர்வ் வங்கி அதிகாரிகள் கூட்டம்
மத்திய மந்திரி அனுராக் தாக்கூர் இன்று தொடங்கி வைக்கிறார்கூறினார்.