< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
ஜி-20 உச்சிமாநாடு: தனியார் நிறுவன ஊழியர்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுமுறை - டெல்லி அரசு உத்தரவு
|30 Aug 2023 3:23 AM IST
டெல்லியில் செப்டம்பர் 8-ந்தேதி முதல் 10-ந்தேதி வரை பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
புதுடெல்லி,
ஜி-20 அமைப்புக்கு இந்த ஆண்டு இந்தியா தலைமை வகிக்கிறது. அந்த அமைப்பின் உச்சி மாநாடு டெல்லியில் பிரகதி மைதானத்தில் வரும் செப்டம்பர் 9 மற்றும் 10-ந்தேதிகளில் நடக்கிறது. இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உள்பட பல்வேறு நாட்டின் அதிபர்கள் வருகை தர உள்ளனர்.
இதனை முன்னிட்டு டெல்லியில் செப்டம்பர் 8-ந்தேதி முதல் 10-ந்தேதி வரை பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி டெல்லியில் வங்கிகள், தனியார் நிறுவனங்கள், கடைகள் மற்றும் வணிக வளாகங்களுக்கு 3 நாட்கள் பொது விடுமுறை அளிக்கப்படுவதாகவும், ஊழியர்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்க வேண்டும் எனவும் டெல்லி அரசு உத்தரவிட்டுள்ளது.