ஜி-20 மாநாடு: டெல்லியில் 207 ரெயில் சேவைகள் ரத்து
|ஜி-20 மாநாட்டை முன்னிட்டு டெல்லியில் 207 ரெயில் சேவைகள் ரத்துசெய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
புதுடெல்லி,
ஜி-20 அமைப்புக்கு இந்த ஆண்டு இந்தியா தலைமை வகிக்கிறது. அந்த அமைப்பின் உச்சி மாநாடு டெல்லியில் பிரகதி மைதானத்தில் வரும் செப்டம்பர் 9 மற்றும் 10-ந்தேதிகளில் நடக்கிறது. இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உள்பட பல்வேறு நாட்டின் அதிபர்கள் வருகை தர உள்ளனர்.
ஜி-20 உச்சி மாநாடு நடப்பதையொட்டி பாதுகாப்பு காரணங்களுக்காக டெல்லி வான்பரப்பில் டிரோன்கள், டிரோன் கேமிராக்கள், ரிமோட் ஏர் கிராப்ட், சிறிய வகை விமானங்கள், ராட்சத பலூன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது. ரெயில் மற்றும் பேருந்து போக்குவரத்திலும் மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது.
இந்த நிலையில், ஜி-20 மாநாட்டை முன்னிட்டு டெல்லியில் வரும் 9,10 மற்றும்11 ஆகிய தேதிகளில் 207 ரெயில் சேவைகள் ரத்துசெய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 36 ரெயில் சேவைகள் குறுகிய காலத்திற்கு நிறுத்தப்படும் என்றும் வடக்கு ரெயில்வே தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.