< Back
தேசிய செய்திகள்
வேறு ஒருவருடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டதால் ஆத்திரம்: காதலியின் கையை துண்டாக்கிய வாலிபர்
தேசிய செய்திகள்

வேறு ஒருவருடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டதால் ஆத்திரம்: காதலியின் கையை துண்டாக்கிய வாலிபர்

தினத்தந்தி
|
14 March 2024 6:50 AM IST

இளம் பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

லக்னோ,

உத்தரபிரதேச மாநிலம் உன்னாவ் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த வாலிபர் ரிங்கு. இவரும், அதே பகுதியை 20 வயது இளம் பெண்ணும் காதலித்து வந்ததாக தெரிகிறது. இந்த நிலையில் அந்த பெண்ணின் குடும்பத்தினர் அவருக்கு வேறொரு ஆணுடன் திருமணம் நிச்சயம் செய்தனர்.

இதனால் அதிர்ச்சியடைந்த ரிங்கு தனது காதலியை தனியாக ஒரு இடத்துக்கு வரவழைத்து அவருடன் பேசினார். அப்போது இருவருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த ரிங்கு, தான் மறைத்து வைத்திருந்த கூர்மையான ஆயுதத்தை எடுத்து காதலியின் இடது கையில் வெட்டினார். இதில் அவரது கை துண்டானது.

இதையடுத்து ரிங்கு அங்கிருந்து தப்பி ஓடினார். இளம் பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

இளம் பெண்ணின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் போலீசார் ரிங்குவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்