< Back
தேசிய செய்திகள்
மணிப்பூரில் இணைய சேவை தடை மேலும் நீட்டிப்பு
தேசிய செய்திகள்

மணிப்பூரில் இணைய சேவை தடை மேலும் நீட்டிப்பு

தினத்தந்தி
|
29 Nov 2023 8:21 AM IST

மணிப்பூரில் இணைய சேவைக்கு தடை தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வருகிறது.

இம்பால்,

மணிப்பூர் மாநிலத்தில் மெய்தி மற்றும் குகி இன மக்களுக்கு இடையே கடந்த மே மோதம் 3-ந்தேதி கலவரம் வெடித்தது. 7 மாதங்களுக்கு மேலாகியும் அங்கு இன்னும் வன்முறை ஓய்ந்தபாடில்லை. இதனிடையே கலவரம் தொடர்பாக சமூகவலைத்தளங்களில் வதந்திகள் மற்றும் வெறுப்பு பேச்சுகள் பரப்பப்படுவதை தடுக்க மாநிலம் முழுவதும் மே 3-ந்தேதி இணைய சேவை துண்டிக்கப்பட்டது. இந்த தடை தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில் மணிப்பூரில் இணைய சேவைக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நேற்று இரவு முடிவுக்கு வந்த நிலையில் தடையை மேலும் 5 நாட்களுக்கு நீட்டித்து மணிப்பூர் அரசு உத்தரவிட்டது. அதன்படி வருகிற 5-ந்தேதி இரவு 7.45 மணி வரை இணைய சேவைக்கு தடைவிதிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்