< Back
தேசிய செய்திகள்
மும்பையில் இருந்து அயோத்திக்கு நடைபயணம் செல்லும் முஸ்லிம் பெண்: உற்சாகமாக வரவேற்கும் மக்கள்...!
தேசிய செய்திகள்

மும்பையில் இருந்து அயோத்திக்கு நடைபயணம் செல்லும் முஸ்லிம் பெண்: உற்சாகமாக வரவேற்கும் மக்கள்...!

தினத்தந்தி
|
21 Jan 2024 12:37 PM GMT

நான் முஸ்லிமாக இருந்தாலும், எனக்கு ராமர் மீது அசைக்க முடியாத பக்தி உள்ளதாக ஷப்னம் கூறியுள்ளார்.

லக்னோ,

உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோவில் கும்பாபிஷேகம் நாளை நடைபெற உள்ளது. இதில் பங்கேற்க மராட்டிய மாநிலம் மும்பையில் இருந்து ஷப்னம் என்ற முஸ்லிம் பெண் 1,425 கிலோ மீட்டர் தூரத்துக்கு நடைபயணம் தொடங்கியுள்ளார். அவருடன் அவரது நண்பர்கள் ராமன்ராஜ் சர்மா, வினீத் பாண்டே ஆகியோர் சென்றுள்ளனர்.

நான் முஸ்லிமாக இருந்தாலும். எனக்கு ராமர் மீது அசைக்க முடியாத பக்தி. ராமரை வணங்குவதற்கு ஒருவர் இந்துவாக இருக்க வேண்டிய அவசியமில்லை. ஒரு நல்ல மனிதனாக இருப்பதுதான் முக்கியம். தற்போது தினமும் 25 முதல் 30 கிலோமீட்டர் தூரம் வரை நடக்கிறேன். இதை நம்பிக்கையின் பயணமாக நாங்கள் பார்க்கிறோம். வழியில் எங்களைப் பார்க்கும் சிலர். இதுகுறித்து விசாரித்து அதை சமூக வலைதளங்களில் வெளியிடுகின்றனர். கடவுள் ராமர் அனைவருக்கும் பொதுவானவர். சாதி, மத. இன பேதமின்றி அவர் பொதுவாக இருக்கிறார்.

எங்களுக்கு பல இடங்களில் போலீசாரும், பொதுமக்களும் பாதுகாப்பு, உணவு. தங்குமிடம் அளித்து உதவி புரிந்தனர். சில சமூக வலைதளங்களில் எனக்கு எதிரான கருத்துகள் வருகின்றன. அதை நாங்கள் பொருட்படுத்துவது இல்லை.

இவ்வாறு ஷப்னம் கூறினார்.

காவிக்கொடியுடன் அவர் நடைபயணம் செல்லும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. வழியில் எதிர்படும் மக்கள் அவருக்கு ஜெய் ஸ்ரீராம் என்று கூறி வாழ்த்துகளை தெரிவிக்கின்றனர்.

மேலும் செய்திகள்