< Back
தேசிய செய்திகள்
மோடி அரசின் முதல் 15 நாட்களில் 10 சம்பவங்கள்: பட்டியல் போட்டு ராகுல் காந்தி குற்றச்சாட்டு
தேசிய செய்திகள்

மோடி அரசின் முதல் 15 நாட்களில் 10 சம்பவங்கள்: பட்டியல் போட்டு ராகுல் காந்தி குற்றச்சாட்டு

தினத்தந்தி
|
24 Jun 2024 11:53 AM GMT

அரசியலமைப்புச் சட்டத்தின் மீதான தாக்குதலை நாங்கள் ஏற்க மாட்டோம் என்று ராகுல் காந்தி கூறியுள்ளார்.

புதுடெல்லி,

மோடி அரசு பதவியேற்ற 15 நாட்களில் 10 சம்பவங்கள் நடந்துள்ளதாக காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி பட்டியலிட்டு குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-

தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியின் முதல் 15 நாட்களில் பயங்கரமான ரெயில் விபத்து, காஷ்மீரில் தீவிரவாத தாக்குதல்கள், ரெயில்களில் பயணிக்கும் பயணிகளின் அவல நிலை, நீட் தேர்வு ஊழல், நீட் முதுகலை ரத்து, யுஜிசி நெட் வினாத்தாள் கசிவு, பால், பருப்பு வகைகள், எரிவாயு, கட்டண விலை உயர்வு , காட்டுத்தீ, தண்ணீர் பஞ்சம், வெப்ப அலை தொடர்பாக பாதுகாப்பு முன்னேற்பாடுகள் இல்லாததால் ஏற்படும் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன.

தனது அரசாங்கத்தை காப்பாற்றுவதில் பிரதமர் மோடி மும்முரமாக செயல்பட்டு வருகிறார். நரேந்திர மோடி மற்றும் அவரது அரசாங்கத்தால் அரசியலமைப்புச் சட்டத்தின் மீதான தாக்குதலை நாங்கள் ஏற்க மாட்டோம். எந்த சூழ்நிலையிலும் இதை நாங்கள் அனுமதிக்க மாட்டோம். இந்தியாவின் பலமான எதிர்க்கட்சி அழுத்தம் தருவதை தொடரும். பொறுப்பு ஏற்காமல் பிரதமரை தப்பிக்க விடாது. இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்