< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
மாமியாருடன் அடிக்கடி தகராறு.. ராணுவ வீரரின் மனைவி எடுத்த விபரீத முடிவு
|15 Jun 2024 3:56 AM IST
மாமியார் தொடர்ந்து குறை கூறி, திட்டி வந்ததால் ராணுவ வீரரின் மனைவி மனமுடைந்து காணப்பட்டுள்ளார்.
பெங்களூரு,
கர்நாடக மாநிலம் பெலகாவி மாவட்டம் சிக்கோடி தாலுகா காகவாடா கிராமத்தை சேர்ந்தவர் பாலு. இவர் ராணுவ வீரர் ஆவார். தற்போது இவர் இமாசல பிரதேசத்தில் பணியில் உள்ளார். இவரது மனைவி ரூபாபாய்(31). இந்த தம்பதிக்கு 2 குழந்தைகள் உள்ளனர். தற்போது ரூபாபாய் தனது மாமியார் செவந்தாவுடன் வசித்து வந்தார்.
இதனால் ரூபாபாய் மற்றும் அவரது மாமியாருக்கு இடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் ரூபாபாயை அவரது மாமியார் குறைகூறி திட்டி உள்ளார். இதன் காரணமாக ராணுவ வீரரின் மனைவி மனமுடைந்து காணப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் வீட்டில் நேற்று முன்தினம் ரூபாபாய் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அவரது மாமியார் காகவாடா போலீசாருக்கு தகவல் கொடுத்தார். தகவலின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.