< Back
தேசிய செய்திகள்
பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் நாளை இந்தியா வருகை
தேசிய செய்திகள்

பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் நாளை இந்தியா வருகை

தினத்தந்தி
|
24 Jan 2024 9:49 AM IST

ஜெய்ப்பூருக்கு வருகை தரும் இம்மானுவேல் மேக்ரான், அங்கு பிரதமர் மோடியை சந்திக்க உள்ளார்.

புதுடெல்லி,

டெல்லியில், வரும் 26-ந்தேதி நடைபெறவுள்ள குடியரசு தின விழா நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக, இந்திய அரசின் அழைப்பை ஏற்று பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் நாளை இந்தியா வருகிறார். நாளைய தினம் ஜெய்ப்பூருக்கு வருகை தரும் இம்மானுவேல் மேக்ரான், அங்கு பிரதமர் மோடியை சந்திக்க உள்ளார்.

இதனிடையே ராஜஸ்தானில் உள்ள ஆம்பர் கோட்டை, ஜந்தர் மந்தர் மற்றும் ஹாவா மகால் உள்ளிட்ட இடங்களுக்கு இம்மானுவேல் மேக்ரான் செல்ல இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து நாளை இரவு டெல்லி புறப்படும் அவர், நாளை மறுநாள் நடைபெறும் குடியரசு தின விழா நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பங்கேற்க உள்ளார்.

முன்னதாக கடந்த ஆண்டு ஜூலை மாதம், இம்மானுவேல் மேக்ரானின் அழைப்பை ஏற்று, 2 நாட்கள் அரசு முறை பயணமாக பிரான்ஸ் சென்ற பிரதமர் மோடி, அங்கு நடைபெற்ற தேசிய தின விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்