< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
கேரளாவில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த நபர் உயிரிழப்பு
|5 July 2022 12:53 AM IST
கேரளாவில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த நபர் நேற்று உயிரிழந்தார்.
கோட்டயம்,
கேரளாவில் உள்ள கோட்டயம் மருத்துவக் கல்லூரியில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த நபர் நேற்று உயிரிழந்தார். அவர் உயிரிழந்ததை உறுதிப்படுத்திய மருத்துவக் கல்லூரி அதிகாரிகள், அவர் உயிரிழந்தது குறித்து போலீசாரிடம் கூறியுள்ளதாகவும், தூதரகத்தை தொடர்பு கொண்ட பிறகு அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்க உள்ளதாகவும் தெரிவித்தனர்.
தொடக்கத்தில் எர்ணாகுளம் பொது மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த அந்த நபர், பின்னர் களமசேரி மருத்துவக் கல்லூரியிலும் சிகிச்சை பெற்றார்.
இந்த நிலையில் கடந்த ஜூலை 2-ந்தேதி உடல்நிலை மோசமாகி கோட்டயம் மருத்துவக் கல்லூரிக்கு மாற்றப்பட்டதாகவும் நேற்று காலையில், அவரது உடல்நிலை மிகவும் மோசமடைந்ததில் அவர் உயிரிழந்தார் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.