< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
உத்தரபிரதேசத்தில் சரக்கு ரெயில் தடம் புரண்டு விபத்து
|11 Aug 2024 9:34 PM IST
சரக்கு ரெயிலின் இரு பெட்டிகள் தடம் புரண்டது.
லக்னோ,
உத்தரப் பிரதேச மாநிலம் சோன்பத்ரா மாவட்டத்தின் அன்பாரா பகுதியிலிருந்து ஒடிசா – சத்தீஸ்கர் எல்லையிலுள்ள காரியார் பகுதிக்கு சரக்கு ரயில் இன்று சென்றது. வாரணாசி மாவட்டத்திற்குட்பட்ட சக்திநகர் அருகே சென்றுகொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக ரெயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது.
இதில், சரக்கு ரெயிலின் இரு பெட்டிகள் தடம் புரண்டது. விபத்துக்குள்ளான பெட்டிகளில் நிலக்கரி மட்டுமே இருந்ததால் இதில் உயிர் சேதங்கள் ஏதும் ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தடம் புரண்ட ரெயில் பெட்டிகளை மீண்டும் தண்டவாளத்தில் நிறுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது.