< Back
தேசிய செய்திகள்
அடுத்த 5 ஆண்டுகளுக்கு ஏழைகளுக்கு இலவச ரேஷன் பொருட்கள் வழங்கப்படும் - பிரதமர் மோடி
தேசிய செய்திகள்

அடுத்த 5 ஆண்டுகளுக்கு ஏழைகளுக்கு இலவச ரேஷன் பொருட்கள் வழங்கப்படும் - பிரதமர் மோடி

தினத்தந்தி
|
5 Nov 2023 8:29 AM GMT

ஏழை மக்களுக்காக இலவச ரேஷன் பொருட்கள் வழங்கும் திட்டத்தை பா.ஜ.க. அரசு தொடங்கியதாக பிரதமர் மோடி தெரிவித்தார்.

போபால்,

மத்திய பிரதேச மாநிலம் ரத்லம் பகுதியில் நடந்த தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது;-

"ஏழை மக்களுக்கு இலவச ரேஷன் பொருட்கள் வழங்கும் பிரதான் மந்திரி கரீப் கல்யான் யோஜனா திட்டம் கடந்த 3 ஆண்டுகளாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தை அடுத்த 5 ஆண்டுகளுக்கு விரிவாக்கம் செய்ய வேண்டும் என்பதில் இந்த அரசு உறுதியாக உள்ளது.

கொரோனா தொற்று காலத்தில் ஏழை மக்கள் தங்கள் குழந்தைகளுக்கு உணவளிப்பதில் மிகுந்த சிரமம் ஏற்பட்டது. அந்த சமயத்தில்தான் இலவச ரேஷன் பொருட்கள் வழங்கும் திட்டத்தை பா.ஜ.க. அரசு தொடங்கியது. நாட்டின் எந்த பகுதிக்குச் சென்றாலும் ஏழை மக்களுக்கு இலவச ரேஷன் பொருட்கள் கிடைக்கும் வகையிலான ஏற்பாடுகளை பா.ஜ.க. அரசு செய்துள்ளது."

இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்தார்.

மேலும் செய்திகள்