< Back
தேசிய செய்திகள்
காபி உற்பத்தியாளர்கள் பயன்படுத்தும் விவசாய மோட்டார்களுக்கு இலவச மின்சாரம்
தேசிய செய்திகள்

காபி உற்பத்தியாளர்கள் பயன்படுத்தும் விவசாய மோட்டார்களுக்கு இலவச மின்சாரம்

தினத்தந்தி
|
23 July 2022 1:57 AM IST

காபி உற்பத்தியாளர்கள் பயன்படுத்தும் விவசாய மோட்டார்களுக்கு இலவச மின்சாரம் வழங்கப்படும் என்று கர்நாடக அரசு அறிவித்துள்ளது.

பெங்களூரு:

கர்நாடகத்தில் காபி உற்பத்தியாளர்கள் பயன்படுத்தும் 10 குதிரை திறன் கொண்ட மோட்டார்களுக்கு இலவச மின்சாரம் வழங்கப்படும் என கர்நாடக அரசு அறிவித்துள்ளது. இதுதொடர்பாக கர்நாடக அரசு பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-

கர்நாடக காபி உற்பத்தியாளர்கள் பயன்படுத்தும் 10 குதிரை கொண்ட மோட்டார்களுக்கு இலவச மின்சாரம் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்அடிப்படையில் மானியமாக வழங்கப்பட உள்ளது. இந்த மானிய தொகை பயனாளிகளின் வங்கி கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படும். இந்த மானியம் சிறு மற்றும் குறு ரக காபி உற்பத்தியாளர்களுக்கு பொருந்தும்.

இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்