< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
சபரிமலையில் காவலர்களுக்கு இலவச உணவு நிறுத்தம் - அரசு உத்தரவால் அதிர்ச்சி
|27 Oct 2022 9:20 AM IST
சபரிமலை ஐயப்பன் கோயிலில், பாதுகாப்பு பணியில் ஈடுபடும் காவலர்களுக்கு வழங்கப்படும் இலவச உணவு நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சபரிமலை,
புகழ் பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஆண்டு தோறும் மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜை காலங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் வருவதால், ஆயிரத்து 500 முதல் 3 ஆயிரம் போலீசார் வரை பாதுகாப்புபணியில் ஈடுபடுத்தப்படுவார்கள்.
15 நாள்கள் தங்கி பணியாற்றும் அவர்களுக்கு தேவசம்போர்டு சார்பில் இலவசமாக உணவு வழங்கப்பட்டு வந்தது. கொரோனா பரவல் காரணமாக தேவசம் போர்டுக்கு வருவாய் குறைந்ததால் அந்த செலவை அரசே ஏற்று வந்தது.
இந்த ஆண்டு முதல் காவலர்களுக்கு இலவச உணவு கிடையாது எனவும், அவர்களிடம் இருந்து நாள் ஒன்றுக்கு 100 ரூபாய் வசூலிக்கவும் உள்துறை அமைச்சகம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, காவல்துறை அமைப்புகள் முதல் மந்திரியிடம் புகார் மனு அளித்துள்ளனர்.