< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
திருப்பதியில் நாளை இலவச தரிசன டோக்கன் ரத்து
|1 Oct 2023 10:44 PM IST
திருப்பதியில் நாளை இலவச தரிசன டோக்கன் வினியோகம் ரத்துசெய்யப்பட்டு உள்ளது.
சென்னை,
திருமலை திருப்பதி வெங்கடேச பெருமாள் கோவிலில் தினசரி ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். இந்த நிலையில் தொடர் விடுமுறை மற்றும் புரட்டாசி சனிக்கிழமைகளில் முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு கூட்டம் நெரிசல் அதிகரித்து காணப்படுகிறது.
இலவச தரிசனத்துக்கு வரும் பக்தர்கள், ஏழுமலையானை தரிசிக்க பலமணி நேரம் ஆகிறது. புரட்டாசி மாதத்தை முன்னிட்டு ஏழுமலையான் கோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிப்பதால், இலசவ தரிசனம் செய்வதற்கான டோக்கன் வினியோகம் நாளை (2-10-2023) ரத்துசெய்யப்படுவதாக தேவஸ்தானம் அறிவித்து உள்ளது.