< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
1,000 குழந்தைகளுக்கு திருப்பதியில் இலவச தரிசனம் - தேவஸ்தான ஆலோசனை குழு தலைவர் சேகர் ரெட்டி தகவல்
|21 April 2023 9:46 AM IST
ஏழை, எளிய குழந்தைகள் ஆயிரம் பேர் திருப்பதியில் இலவச தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தேவஸ்தான ஆலோசனை குழு தலைவர் சேகர் ரெட்டி தெரிவித்துள்ளார்.
திருப்பதி,
ஏழை, எளிய குழந்தைகள் ஆயிரம் பேர் திருப்பதியில் இலவச தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தேவஸ்தான ஆலோசனை குழு தலைவர் சேகர் ரெட்டி தெரிவித்துள்ளார்.
திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் தமிழ்நாடு - புதுச்சேரி மாநில ஆலோசனைக்குழு தலைவர் சேகர் ரெகட்டி சென்னை தியாகராய நகரில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய சேகர் ரெட்டி, தனியார் தொண்டு நிறுவனம் மூலம் சமுகத்தில் பின் தங்கிய, மாற்றுத்திறனாளி குழந்தைகள் ஆயிரம் பேரை, வரும் 25-ம் தேதி திருப்பதி தரிசனத்துக்கு இலவசமாக அழைத்து செல்ல இருப்பதாக தெரிவித்தார்.