< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
நாட்டில் ஒவ்வொரு குழந்தைக்கும் இலவச, தரமான கல்வி வழங்க வேண்டும் - மணிஷ் சிசோடியா
|1 Oct 2022 7:10 PM IST
டெல்லியில் ஒவ்வொரு குழந்தைக்கும் தரமான கல்வியை வழங்குவதற்கு அரசு கடுமையாக உழைத்து வருகிறது என அம்மாநில துணை முதல்-மந்திரி மணிஷ் சிசோடியா தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி,
டெல்லி துணை முதல்-மந்திரியும், கல்வி மந்திரியுமான மணிஷ் சிசோடியா அரசு பள்ளிகளில் இன்று ஆய்வு மேற்கொண்டார்.
அதன்பின் அவர் பேசுகையில், உலகின் நம்பர் ஒன் நாடாக இந்தியாவை மாற்ற நாட்டில் உள்ள ஒவ்வொரு குழந்தைக்கும் இலவசமான, தரமான கல்வியை அளிக்க வேண்டும். நம்முடைய குழந்தைகள் தொழில் முனைவோராகவும், வேலை அளிப்பவர்களாகவும் மாற விரும்புவதை நாம் உறுதி செய்ய வேண்டும்.
டெல்லியில் உள்ள ஒவ்வொரு குழந்தையும் படிப்பதற்கு ஒரு சிறந்த பள்ளியை பெற வேண்டும். அங்கு அவர்களுக்கு உலகத் தரம் வாய்ந்த கல்வியை இலவசமாக வழங்க வேண்டும் என்று முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலுக்கும் எனக்கும் கனவு உள்ளது. இந்த லட்சியத்தை நிறைவேற்ற நாங்கள் கடுமையாக உழைத்து வருகிறோம்.' இவ்வாறு அவர் பேசினார்.